கூகுளானது பல அதிரடியான வசதிகளை நமது பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்திருந்தது.இதில் அனைவராலும் அதிகம் பயன்படுத்தக் கூடியது ok google வசதியை தான். தற்போது அந்த சேவையை கூகுள் தடை செய்ய முடிவு செய்துள்ளது.மேலும் ஒருவரின் குரல் மூலம் போனை அன்-லாக் செய்யும் வசதியையும் நீக்குகிறது.
ஏற்கனவே வெளியான மொட்டோ-z,பிக்சல்-xl ஆகிய போன்களில் குரலை வைத்து போனை அன் -லாக் செய்யும் வசதி இடம்பெற்றிருந்தது,சமீபத்தில் வெளியான கூகுள் 9.27 அப்டேட் மூலம் இந்த செயல்பாட்டை இழந்துள்ளது.
இந்த அப்டேட்டினால் கூகுள் கேலண்டர், ஜி மெயில் போன்ற சில ஆப்களில் மட்டும் தான் ’ok google’ வசதி செயல்படும்.அதே போன்று அடுத்து வெளியாகவுள்ள கூகுள் பிக்சல்-3xl போனில் குரலை வைத்து போனை அன் -லாக் செய்யும் வசதி நீக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரலை வைத்து யாரும் தவறாக பயன்படுத்த முடியாது என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.