தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்க முடியாது

தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. எனினும், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும், தாக்குதல் குறித்த ஆதாரங்களை அளித்தால் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.

இந்நிலையில், தாக்குதல் குறித்த ஆதாரங்களை பாகிஸ்தானிடன் வழங்கப்போவதில்லை என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது. நட்பு நாடுகளிடம் ஆதாரங்களை வழங்கி பாகிஸ்தானின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவோம் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version