2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் – யர்னஸ்ட் யங் அமைப்பு தகவல்

வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என்று யர்னஸ்ட் யங் (ernst young) ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தின் சர்வதேச ஆலோசனை நிறுவனமான யர்னஸ்ட் யங் (ernst young) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் வேகமான இணைய சேவையை வழங்க உதவுவதுடன், புதிய செயலிகளையும் பயன்படுத்துவதற்கு ஆதாரமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இணைய பயன்பாடு 18 ஜிபியை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 65 கோடியை எட்டும் எனவும், 2022-க்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் திறன் இந்தியாவிடம் உள்ளதால் கூடுதலாக 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் யர்னஸ்ட் யங் (ernst young) அமைப்பு தெரிவித்துள்ளது.

Exit mobile version