வருமான வரி உள்ளிட்டவைகளை மாற்றி அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் கேட்பு

வருமான வரி மற்றும் நிறுவனங்களுக்கான வரி விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்து முதல் முறையாக மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைகளை கேட்டுள்ளது.

2020-21 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டாவது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தனிநபர் வருமான வரி, நிறுவனங்களுக்கான வரி, சுங்க வரி, உற்பத்தி வரி மற்றும் மறைமுக வரி விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைகளை கேட்டு வருகிறது. முதல்முறையாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2020-21 நிதி நிலை அறிக்கையில், பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version