உத்திரமேரூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உத்திரமேரூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி எண்டத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற நூக்காலம்மன் கோயில் உள்ளது. கோயிலின் உண்டியலை உடைத்த மர்ம நபர் அதில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடுத்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version