ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக, ரயில்வே தண்டவாளத்தின் அடியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். இதற்கு பொது மக்களிடமிருந்தும் சமூக ஆர்வலர்களிடமிருந்தும் ஆதரவு பெருகியது. இதையடுத்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, ராட்சத குடிநீர் குழாய்களை கொண்டு வரும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், ஜோலார்பேட்டையை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் அமைந்துள்ள மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் நீர்தேக்கத் தொட்டியிலிருந்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.