இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: வழக்கு விசாரணை ஏப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 24-ந் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியும், இடைத்தரகருமான சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன்,
மல்லிகார்ஜூனா, பி.குமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் மீதான ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.பதக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ஏப்ரல் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா,பி.குமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version