பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே நடத்த எம்.பி.க்கள் ஆதரவு

முன்கூட்டியே தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து பிரிட்டன் எம்.பி.க்கள் வாக்களித்ததையடுத்து டிசம்பர் 12 ஆம் தேதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு முன்பு இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. பிரெக்சிட் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தேக்க நிலையால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version