கோவை மாவட்ட ஆட்சியர் கட்டடத்தில் பிரெய்லி டைல்ஸ் பதிப்பு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் ப்ரெய்லி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடம் பொதுப்பணி துறை சார்பில் புணரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. மூன்று தளங்களை கொண்ட இந்த பழைய கட்டடத்தில் தான் சமூக நலம், நுகர்வோர் குறை தீர்மன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். குறிப்பாக குறை தீர்க்கும் முகாம் நடக்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிகளவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் வருகை தருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தின் மூன்று தளங்களிலும் பிரெய்லி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பிறரின் உதவியின்றி தாங்கள் செல்ல வேண்டிய அலுவலகங்களுக்கு பார்வையற்றோர் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version