மன்னார்குடி அருகே திருமண ஆசை காட்டி, இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சாமியப்பன் மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 6 மாதங்களாக நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதில் சுகன்யா கர்ப்பமாகியுள்ளார்.
இதனிடையே தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக இருவர் மீதும் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுகன்யா புகார் அளித்தார். இதன் பேரில் சாமியப்பன் மற்றும் அவரின் தம்பி பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சாமியப்பன் தலைமறைவான நிலையில், அவரது சகோதரர் பாலமுருகனை கைது செய்த காவல்துறையினர் திருவாரூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தினர். தலைமறைவான சாமியப்பனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.