பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் இன்று பதவி ஏற்கிறார்.
கடந்த ஜூன் மாதம் தெரசா மே பதவி விலகியதை அடுத்து பிரிட்டனின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. கன்சர்வேடிவ் கட்சியை பொருத்தவரை கட்சியின் தலைவரே, நாட்டின் பிரதமராக இருப்பார். எனவே, கட்சியின் தலைவர் பதவி மற்றும் நாட்டின் பிரதமரை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் போரீஸ் ஜான்சன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெளியுறவுத் துறை செயலாளர் ஜெராமி ஹண்டை விட 75 சதவீத அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் 92 ஆயிரத்து 153 வாக்குகள் அவருக்கு கிடைத்தன. இதனையடுத்து, பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் இன்று பதவி ஏற்க இருக்கிறார்.