மங்களூர் விமான நிலையத்திற்குள் கிடைத்த வெடிகுண்டை, நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர்.
கர்நாடகாவில் உள்ள மங்களூர் விமான நிலையத்திற்குள் மர்ம பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் பைக்குள் வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வெடிபொருட்கள் இருந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்து அதனை செயலிக்க செய்தனர்.
விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்ததில், இரண்டு பேர் ஆட்டோவில் வந்து பையை வைத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.