குமரியில், கடல் காற்று அதிகரித்ததன் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரியில், கடல் நடுவே அமைந்துள்ள, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைகளை சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் இயந்திர படகு மூலம் சென்று பார்த்து வருவது வழக்கம். இந்தநிலையில், ஃபானி புயல் காரணமாக, மீன் பிடிக்க தடை இருந்தபோதும், கடற்கரையின் அருகே உள்ள காரணத்தால், இந்த சுற்றுலா பகுதிகளை பார்த்து வருவதற்கான சுற்றுலா படகு போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட்டு வந்தது.
இன்று காலை வழக்கம் போல் 8 மணிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கிய நிலையில், 11 மணியளவில், திடிரென்று கடலில் காற்றின் தாக்கம் அதிகரித்த நிலையில் படகை முறையாக கடலில் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.