வசந்த காலத்தை முன்னிட்டு ஜப்பானில் உள்ள யோகோஹமாவில் பூத்திருக்கும் சகுரா மலர்களைக் காண வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஜப்பானில் பல மாதங்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் வசந்த காலம் தொடங்கியுள்ளது. இதனையொட்டி அங்குள்ள யோகோஹமா மாகாணத்தில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சகுரா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனைக் காண உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
அங்குள்ள மினடோ மிராய் துறைமுகத்தில் ரோஜா, லில்லி போன்ற பூத்துக்குலுங்கும் பூக்களை காணவும் ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் யோகோ நதியின் இரு புறங்களிலும் உள்ள சகுரா மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை படகு சவாரி செய்யும் போது காணுவதால் மனதிற்கு இதமளிப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.