சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது – பினராயி விஜயன்

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயற்சிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, வன்முறையில் ஈடுபடுபவர்களில் 91 சதவிகிதம் பேர் சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அவர்களால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய பினராயி விஜயன், பொதுமக்களின் சொத்துக்களும் சேதமடைந்திருப்பதாக தெரிவித்தார். இதுபோன்ற வன்முறையின் போது, பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

50 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் சபரிமலையில் முதல்முறையாக வழிபட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் அரசுக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version