தெலங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு : பாஜக தலைவர் லக்ஷ்மண்

தெலங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு அளிக்க தயார் என்று மாநில பாஜக தலைவர் லக்ஷ்மண் தெரிவித்திருப்பது தெலங்கானா அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடந்தது.

அங்கு கடந்த 7ஆம் தேதி சட்டபேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சந்திரசேகர் ராவுக்கு ஆதரவான சூழல் நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தெலங்கானாவில் தொங்கு சட்டபேரவை அமையும் பட்சத்தில் சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு அளிக்க பாஜக தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

ஆனால் உவைசியை சந்திரசேகர் ராவ் கழற்றிவிட வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். பா.ஜ.கவின் பி-அணியாக சந்திரசேகர் ராவ் செயல்படுகிறார் என்று காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், லக்ஷ்மணின் ஆதரவு அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Exit mobile version