சிவகங்கையில் பறவைகளுக்காக 40 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத மக்கள்

சிவகங்கை மாவட்டம் கொள்ளுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பறவைகளுக்காக கடந்த 40 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொள்ளுகுடிப்பட்டி கிராமம் அருகே தமிழக அரசு சார்பில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையையொட்டி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தில் உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, நத்தைகொத்தி நாரை உள்ளிட்ட 217 வகையான சுமார் 8 ஆயிரம் பறவைகள் உள்ளன.

இங்கு அதிகளவில் பறவைகள் இருப்பதால், கொள்ளுகுடிப்பட்டி கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளிக்கு மட்டுமல்லாமல் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் பட்டாசு வெடிக்காமல் கட்டுக்கோப்புடன் உள்ளனர்.

Exit mobile version