பிக்பாஸ் லாஸ்லியாவின் முதல் போட்டோ ஷுட்: அல்லும் லைக்ஸ்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபெற்ற ஓவியாவுக்கு ஆர்மி உருவானது போலவே லாஸ்லியாவுக்கும் ஆர்மி உருவானது. பொதுவாக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள். ஆனால் லாஸ்லியா  என்றாவது தான் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா ஒரு போட்டோ ஷூட் செய்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு அந்த புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். அதில் ‘2019 ஆம் ஆண்டில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் மறக்கமுடியாத ஆண்டாக இருக்கிறது. என்னை கண்மூடித்தனமாக நம்பி ஊக்கப்படுத்துபவர்களுக்கு நன்றி. இது தான் என்னுடை முதல் போட்டோ ஷூட். லவ் யூ’ என கூறியுள்ளார்.

இவரின் இந்த திடீர் போட்டோ ஷுட்டால் ரசிகர்கள் விரைவில் லாஸ்லியாவை திரையில் பார்க்கலாம் என எதிர்பார்த்து வருகின்றனர்.

Exit mobile version