’குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு டிக்டாக் செய்த பிக்பாஸ் முகென்: வைரல் வீடியோ

2019 ஆம்  ஆண்டு ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டாலும் இலங்கையிலிருந்து தர்ஷன் , லாஸ்லியா மற்றும் மலேசியாவிலிருந்து முகென் ராவ் பங்குப்பெற்றனர்.ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் மீரா மிதுன், மதுமிதா , தர்ஷன்  ஆகியோர்கள் பல சர்ச்சைகளில் சிக்கினர்.

100 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பங்குபெற்றவர்கள் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமானவர்களாக திகழ்கின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான  முகென் ராவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.இவர் பாடிய  ‘சத்தியமா நான் சொல்லுறன் டி ‘பாடல் பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக மாறிவிட்டது.மேலும் காதலர் தினத்தை கொண்டாடி தனது காதலியுடன் முகென் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது

இந்நிலையில் மாஸ்டர் படத்திலிருந்து வெளியான ’ குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு முகென் டிக்டாக் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version