தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழங்களில் நடைபெறாமலிருக்கும் பட்டமளிப்பு விழா!

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தாதது ஏன்? என்ன செய்து கொண்டிருக்கிறது உயர்கல்வித்துறை.

திருச்சியில் செயல்பட்டு வரக்கூடிய பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவையில் செயல்பட்டு வரக்கூடிய பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுவதற்கு வரக்கூடிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் ஆய்வுகளையும் பட்டங்களையும் முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசும் உயர்கல்வி துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்வி தற்போது பூதாகரமாக எழுந்திருக்கிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழே இயங்கக்கூடிய 9 மாவட்டங்களில் 130 கல்லூரிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டங்களை வழங்காமல் இழுத்து அடிப்பதால் மாணவர்கள் மேலும் மிகுந்த உளச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த பேரத்திற்கு ஆழ்த்திருப்பது உயர்கல்வித் துறையே காரணம் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் 133 உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. சுமார் 85 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறாமல் காத்திருக்கின்றனர். அதேபோன்று கோவை வேளாண் கல்லூரியில் சுமார் 3,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெறாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடிய இளைஞர்கள் லட்சக்கணக்கில் இருக்கும்போது, பட்டம் பெறாமல் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.

Exit mobile version