கடலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் வேண்டுகோளின் பேரில் விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
குறிஞ்சிப்பாடியை அடுத்த மருவாய் ஊராட்சியில் 80 ஏக்கர் பரப்பளவில் பழமை வாய்ந்த மண் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் மருவாய், உள் மருவாய், அரங்கமங்களம், ராஜாகுப்பம் ஆகிய கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கான பாசன ஆதாரமாகவும் திகழ்கிறது.
இந்நிலையில் மண் ஏரியின் நீர் ஆதாரத்தை பெருக்கவும், ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்தவும், வண்டல் மண் எடுக்கும் பணிகளை அந்த பகுதி விவசாயிகள் மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப வண்டல் மண் எடுத்து செல்கின்றனர்.
குடிமராமரத்து திட்டத்தின் மூலம், ஏரியில் வண்டல் மண் எடுப்பதால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிப்பதோடு, தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.