பீட்ரூட்டின் கடுமையான விலை சரிவால் விவசாயிகள் வேதனை

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் பீட்ரூட்டின் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையான விலை சரிவால் வேதனை அடைந்துள்ளனர்.

மடத்துக்குளம் அருகேயுள்ள உடுமலை மற்றும் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகுவதாக கூறப்படுகிறது. ஏக்கருக்கு 8 டன் வரை மகசூல் கிடைத்து வரும் நிலையில், தற்போது பீட்ரூட் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்த விலை சரிவால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உழவர் சந்தை மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலம் கிலோவுக்கு 10 அல்லது 12 ரூபாய்க்கு விலையை நிர்ணயம் செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version