உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தகூடிய பிளாஸ்டிக் பொருட்களை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயன்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வரியம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு உத்தரவின் படி பிளாஸ்டிக் தடை குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வரியம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதுடன் இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும், இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version