போடோ பயங்கரவாத அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை

 

போடோ பயங்கரவாத அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு போடோ என்னும் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து கடந்த 1990-ம் ஆண்டு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடைவிதித்தது. அப்போது முதல் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் அந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் போடோ பயங்கரவாத இயக்கம் மீதான தடையை, மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் “போடோ பயங்கரவாத இயக்கமானது, கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும், தேசவிரோத சக்திகளுடன் இணைந்து நாட்டின் ஒருமைப்பாட்டை குறைக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த இயக்கத்துக்கு தடைவிதிக்க வேண்டியது அவசியமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version