“பாகுபலி” ராணாவுக்கு என்னாச்சு- அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள ராணாவின் சமீபத்திய புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ராணாவை “பாகுபலி” திரைப்படத்தின் ‘பல்வாள்தேவன்’ கதாபாத்திரம் தான் உலகம் முழுவதும் புகழ் பெற வைத்தது. அந்த படத்தில் வீரனுக்கு ஏற்ற உடல் எடையுடன் காட்சியளித்திருப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் வங்கியின் விளம்பரத்திற்காக ராணா வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் உடல் எடை மெலிந்து ஒரு நோயாளியை போல் அவர் காட்சியளித்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த மாற்றம் குறித்து கருத்துகளை பதிவிட்டனர். ஆனால் ராணா அடுத்து நடிக்கவுள்ள ‘விரதபர்வம்1992’ படத்திற்காகவே தனது உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version