த.மா.கா வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கீடு

தஞ்சை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் நடராஜனுக்கு, ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா சைக்கிள் சின்னத்தை பெற முயற்சி செய்தது. ஒரே தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமாகாவிற்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Exit mobile version