கால்களை இழந்தும் தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டும் நபர்…..

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விபத்தில் கால்களை இழந்த கனரக வாகன ஓட்டுநர் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்துவது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

குடியாத்தம் காதர்பேட்டையைச் சேர்ந்த முகமது கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2007ல் சென்னை காவிரிப்பாக்கம் பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் தனது இரு கால்களையும் முகமது இழந்தார். ஒரு ஓட்டுநருக்கு உடலின் இன்றியமையாத பாகமான கால்களை இழந்ததால் பிழைப்புக்கு என்ன செய்வது என்று வழிதெரியாமல் போனது. எனினும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டார். இன்று சரக்கு ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தும் முகமது அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

Exit mobile version