மகளின் திருமணத்தின் போது ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை

சென்னை அயனாவரத்தில் மகளின் திருமண வரவேற்பின் போது ஆட்டோ டிரைவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திக்காகுளம் பகுதியை சேர்ந்த ஜெபசீலன் ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவரது மகள் ஷீபா ராணிக்கு கடந்த 10 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மீஞ்சூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அனைவரும் சென்ற நிலையில் வீட்டிலிருந்து வரவேற்புக்கு ஜெயசீலன் கிளம்பி கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் இவரை வெட்டியது.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜெபசீலன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக ஜெபசீலன் புகார் அளித்தது தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் அவரை படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.

Exit mobile version