நலிந்தவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆட்டோ விழிப்புணர்வு பயணம்

தமிழகத்தின் நலிந்தவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தஞ்சையில் 12 வெளிநாடுகளை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் கொண்ட குழுவினர் ஆட்டோ பிரசார விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்பெயின் உள்ளிட்ட 12 வெளிநாடுகளை சோர்ந்த 32 பேர் கொண்ட குழுவினர், சுற்றுலா வளர்ச்சியின் ஒரு அங்கமாகவும், தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 9 நாட்கள் ஆட்டோவில் தாங்களே ஓட்டி பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த 29ம் தேதி சென்னையில் 21 ஆட்டோக்களில் பயணத்தை தொடங்கிய இந்த குழுவினர், இன்று தஞ்சை வந்தடைந்தனர். பெரியகோயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த குழுவினர் மதுரை செல்ல உள்ளனர். வரும் 6ம் தேதி திருவனந்தபுரத்தில் பயணத்தை முடிக்கவுள்ளனர். தமிழகத்தில் நலிந்தவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தங்களது நாட்டில் நிதிதிரட்டி வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version