ஒரு நாட்டின் நாடாளுமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இருக்கக்கூடிய ஒரு அவை. நாட்டிற்காகவும் மக்கள் நலனிற்காகவும் பல சட்டங்கள் அரங்கேறக் கூடிய ஒரு அவை. ஆனால் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் ஒரு வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் நாதன் லாம்பேர்ட். அவர் நாடாளுமன்றத்தில் தன்னுடைய உரை நேரத்தின் போது உரையினை வாசித்துக் கொண்டிருந்த வேளையில், சக எம்பிக்கு தனது காதலைத் தெரிவித்தார் நாதன் லாம்பேர்ட். காதலி நோவா எல்ரிச்சும் சம்மதம் தெரிவித்ததால் கர ஒலியல் நிறைந்தது நாடாளுமன்ற அரங்கம். இவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. உரை முடிந்ததும் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் சுவாரஸ்யமாக பகிரப்பட்டு வருகிறது.
Wedding bells. ALP Preston MP Nathan Lambert has used his inaugural speech in parliament to proposal to his partner… but he had no ring . @abcmelbourne #springst pic.twitter.com/TiKpaGRrge
— Richard Willingham (@rwillingham) March 7, 2023