இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: மேக்ஸ்வெல் அதிரடியால் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 இருபது ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டிணத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பெங்களுரூவில் நடந்த 2-வது இருபது ஓவர் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ராகுல், தவான் இணை முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் தந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் கோலியும் தோனியும், 4-வது விகெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து வியக்க வைத்தனர். சிறப்பாக விளையாடிய கோலி 6 சிக்ஸ் உட்பட 72 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது.

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சிறப்பான முறையில் எதிர்கொண்டது. அந்த அணியின் வீரர்கள் ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 9 சிக்சருடன் 113 ரன்கள் குவித்தார். 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.

Exit mobile version