இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, புஜாரா, மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோரின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மார்கஸ் ஹாரிஸ் மட்டும் அரைசதம் கடந்த நிலையில் ஜடேஜா பந்தில் வெளியேறினார்.

தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. கேப்டன் டிம் பெய்ன் மற்றும் ஹேண்ட்ஸ்கோம் களத்தில் உள்ளனர்.

Exit mobile version