சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய இணை பேராசிரியர்

சென்னை ஐஐடியில் உள்ள பெண்கள் கழிவறையில், செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த இணைப் பேராசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில், பெண்கள் கழிவறை ஒன்று உள்ளது. இதில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

பெண்கள் கழிவறையில் இவருக்கு என்ன வேலை என சந்தேகம் அடைந்த மாணவி, கழிவறைக்குள் சென்று கவனித்தபோது, தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஒரு இடைவெளியில் செல்போன் ஒன்றின் கேமிரா ஆன் செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் பேராசிரியரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுபம் பானர்ஜி, ஏற்கனவே இதே போன்ற செயலில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், மேலும் ஏராளமான வீடியோக்கள் இருப்பதால், அவை ஆய்விற்காக தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version