ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முன்னேற்றம்!

தற்போது இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியுடன் சொந்த மண்ணில் மோதி வருகிறது. தற்போது இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் முடிவடைந்துள்ளது. இரண்டு போட்டிகளிலுமே இந்தியா வென்றுள்ளது. இதற்கு ஜடேஜா மிக முக்கிய காரணம் ஆவார். அவருக்கு உறுதுணையாக தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினும் இருந்தார். இந்த இரண்டுப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பவுலர்களின் தரவரிசையில் 864 புள்ளிகள் எடுத்து  இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் நீடிக்கிறார். மேலும் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 6 வது இடத்திலும், ஜடேஜா 9 இடத்திலும் உள்ளார்கள். பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவின் லபுசேன் முதல் இடத்தில் தொடர்கிறார். 6 வது இடத்தில் ரிஷப் பண்ட் உள்ளார். 7 வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

Exit mobile version