பெண்கள் சுகாதாரத்தின் மீது அக்கறையுடன் செயல்பட்டதால் அருணாச்சலம் முருகானந்தத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் கடந்த பல வருடங்களாக பெண்கள் மத்தியில் ஆரோக்கியமான சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு மகளிர் குழுக்களுக்கு வழங்கியுள்ளார். இவரது இந்த சேவையை பாராட்டி பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இதுதவிர இவரது வாழ்க்கை வரலாற்றை பேட்மேன் என்ற தலைப்பில் இந்தி திரைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இவரது வாழ்க்கை வரலாறு குறித்த டாக்குமெண்டரி படம் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது தமிழக அரசு பன்னிரெண்டாம் பாடத் திட்டத்தில் பயோடெக்னாலஜி பிரிவில் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.