முதன்முறையாக சேம்புக்கரை மலை கிராமத்தில் சாலை அமைக்க ஏற்பாடு

கேரள சாலைக்கு செல்லும் பகுதியில் உள்ள ஆனைகட்டியில் இருந்து 7 கிலோ மீட்டர் மலைப்பகுதிக்குள் இருக்கும் சேம்புக்கரை மலை கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. இங்கிருந்து தூமனூர் செல்லும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து சாலை அமைக்கப்படவில்லை. இங்கிருந்த மக்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்க 70 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வி.சி.ஆறுக்குட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி ஆறுக்குட்டியிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அவர்களுக்கு வீட்டு பட்டா வழங்கி குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version