சென்னையில் குடிநீர் தட்டுபாட்டை போக்க தேவையான நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது.
சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசின் குடிநீர் வாரியம் செய்துள்ளது. ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகள் மூலம் கிடைக்கும் குடிநீரை குழாய் இணைப்பு இல்லாத இடங்களுக்கு லாரி மூலம் வழங்கி வருகிறது. அதேபோல் தேவைப்படும் இடத்தில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன. குடிசை பகுதிகளிலும், குழாய்கள் பதிக்க முடியாத இடங்களை ரெட் சோன் என்று அடையாளப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் தினமும் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர தினந்தோறும் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் 24 மணி நேரமும் பொதுமக்களின் தொலைப்பேசி அழைப்பை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.