5 புதிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பின்படி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணியிட மாறுதல் மற்றும் தற்காலிக பதவி உயர்வின் அடிப்படையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலராக ஆஞ்சலோ இருதயசாமியும், திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலராக குணசேகரனும், ராணிப்பேட்டைக்கு பரமதயாளனும், கள்ளக்குறிச்சிக்கு குமரனும், தென்காசிக்கு கருப்பசாமியும் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாமக்கல் மாவட்டத்திற்கு அய்யண்ணனும், கோயம்புத்தூருக்கு உஷாவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வெற்றிச் செல்வியும், தருமபுரி மாவட்டத்திற்கு கீதாவும், திருவண்ணாமலைக்கு அருள்செல்வமும், காஞ்சிபுரத்திற்கு சத்தியமூர்த்தியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக சுந்தரராஜ், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக திருவளர்செல்வியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version