தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மற்றத்தினால் வழங்கப்படும் கலைமாமணி விருது, கலை மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்கவும், தொன்மையான கலைவடிவங்களை பாதுகாக்கவும் வேண்டி பாடுபடும் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, விருது பெரும் கலைஞர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது திரைப்பட நடிகை குட்டி பத்மினி, நகைச்சுவை நடிகர் பாண்டு, உள்ளிட்ட 30 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோல், 2012ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது, கானா பாடகர் கானா உலகநாதன் மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட 30 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது, திரைப்பட குணச்சித்திர நடிகர் பாண்டியராஜன், நடிகை நளினி, நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், நாட்டுப்புற பாடகர் பறவை முனியம்மா உள்ளிட்ட மொத்தம் 19 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது, மூத்த பத்திரிக்கையாளரான நியூஸ் ஆனந்த், நாடக நடிகர் பி.கே செல்வம், திரைப்பட நடன இயக்குனர் தாரா மாஸ்டர் உள்ளிட்ட 20 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோல், 2018ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது, திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, திரைப்பட பாடல் ஆசிரியர் யுகபாரதி, திரைப்பட ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, திரைப்பட பின்னனி பாடகர் கானா பாலா உள்ளிட்ட 20 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டிற்கான கலைமாணி விருது, திரைப்பட நடிகர் சசிகுமார், திரைப்பட குணச்சித்திர நடிகர் எம்.எஸ் பாஸ்கர், திரைப்பட குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, உள்ளிட்ட 20 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோல், 2017 ஆம் ஆண்டிற்கான விருது, திரைப்பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, இயக்குனர் ஹரி, உள்ளிட்ட 28 பேருக்கு வழங்கப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான திரைப்பட பின்னனி பாடகர் உன்னி மேனன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், நடிகர் ஸ்ரீகாந்த், மற்றும் சந்தானம் உள்ளிட்ட 34 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version