அண்ணா பல்கலைக்கழகத்தில் இஞ்சினியரிங் கல்லூரி சேர்க்கை கட்டண உயர்விற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் கட்டணத்தை ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்த்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இந்த கட்டண உயர்வுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நான்கு கல்லூரிகளும், 13 உறுப்புக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கடந்த 2000 ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இவ்விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை வட்டார அதிகாரிகள் கூறும்போது , அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த கட்டண உயர்வு முடிவை அரசு ஏற்கவில்லை என்றும், எந்த காரணம் கொண்டும் அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு செய்யப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.