உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஆரோக்கியம் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் லோக்பால் மற்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.