வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வன விலங்குகள் நீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
போதிய மலை பெய்யாத காரணத்தால், கோடை காலம் துவங்குவதற்கு முன்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் வறண்டு போயுள்ளன. கோவையின் மேட்டுபாளையம் , சிறுமுகை மற்றும் காரமடை வனச்சரக பகுதிகளில் வறட்சி காரணமாக நீர் நிலைகள் வறண்டு , மரங்கள் காய்ந்து போயுள்ளன. இதனால் யானைகள், மான்கள், காட்டெருதுகள் என அனைத்து வன உயிரினங்களும் தாகம் தீர்க்க நீராதாரங்களை தேடி அலைகின்றன. எனவே, வனத்துறையினர் காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் செயற்கையாய் தண்ணீர் தொட்டிகளை கட்டி அதில் நீர் நிரப்பும் பணியில் இறங்கியுள்ளனர்.