சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி தேரோட்டம் கோலாகலம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனமும், ஆனி திருமஞ்சன விழாவும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது.

விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஷ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனி தனியாக அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டு வடம் பிடித்து இழுத்தனர். நாளை காலை முதல் ஆனி திருமஞ்சன விழா தரிசனம் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையையொட்டி, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version