மதுரையில் ரூ. 2 கோடி மதிப்பில் புராதன சிறப்பை விளக்கும் நினைவு சின்னங்கள்

தமிழக அரசின் சார்பில் மதுரையின் புராதன சிறப்பை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவு சின்னங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மதுரை புராதனத்தை போற்றும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில், தமிழக அரசின் சார்பில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் மாடுபிடி வீரனின் கருங்கல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாத்திமா கல்லூரி அருகில், மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருத்தேரில் அமர்ந்திருப்பது போல் ஒரே கல்லால் ஆன சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு சின்னங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

இதேபோல் பழங்காநத்தம் பகுதியில் திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள தர்பார் இருக்கை போன்ற இருக்கையும், விளக்குதூண் பகுதியில் இருப்பது போன்று 10 தூண்களும் அமைப்பட்டுள்ளன. மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் பாறை மேல் மயில் அமர்ந்திருப்பது போன்ற நினைவுச் சின்னமும், செல்லூர் பகுதியில் மற்றொரு நினைவு சின்னமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version