நீச்சல் பயிற்சியின் போது ஏற்ப்பட்ட விபரீதம்

சென்னையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு நீச்சல் பயிற்சி மையத்தில் நங்கநல்லூரைச் சேர்ந்த 11 ம் வகுப்பு மாணவன் சாய்ஸ்ரீவட்சன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டான். திடீரென தண்ணீரில் அவன் மூழ்கியதால் அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் சாய்ஸ்ரீவட்சன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் சாய்ஸ்ரீவட்சன் இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியில் ஈடுபட்ட போது, இந்த விபத்து நிகழ்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version