கர்ப்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன், பிறக்க போவது ஆணா, பெண்ணா? என்பது குறித்து டுவிட்டர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான “மதராசப்பட்டினம்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். நடிகர் விஜய், விக்ரம், தனுஷ் ஆகியவர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக, ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “2.0” திரைப்படத்தில் ரோபோவாக நடித்து இருந்தார்.
பின்னர், தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்த எமி ஜாக்சன், சில மாதங்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது சமூக வலைளதளங்களில் வைரலாகியது. இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த அவர் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், எமி ஜாக்சன் தனது டுவிட்டர் வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தான் ஒரு ஆண் குழந்தையை பெற்றேடுக்க போவதாக மகிழ்ச்சி கரமாக தெரிவித்துள்ளார்.
We’re having a…….. ✨???♂️ pic.twitter.com/DGSqvYKYZr
— Amy Jackson (@iamAmyJackson) August 26, 2019