தூத்துக்குடி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரை சேர்ந்தவர் ஜெயராமன். அதே பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகி பெஸ்கிராஜா என்பவரின் முகநூல் பதிவிற்கு பதில் அளித்து போட்ட பதிவின் காரணமாக இருவருக்கும் மோதல் முற்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் பெஸ்கிராஜா தனது கூட்டாளியுடன் ஜெயராமனின் இல்லத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
மோதல் முற்றிய நிலையில், பெஸ்கிராஜா இரும்பு கம்பியால் ஜெயராமனை அடித்ததில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமமுக நிர்வாகி பெஸ்கிராஜாவை கைது செய்தனர்.