அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய சீனா ஆர்வம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் 

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள சீனா ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் சீனப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டது. இதனால் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப்போர் உச்சகட்டத்தை எட்டியது. இதன் பிரதிபலிப்பாக உலக பங்கு சந்தையிலும் மந்தமான போக்கு காணப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சீன அதிபருடன் தொலைபேசியில் உரையாடியதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், சீனா தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக கூறிய டிரம்ப், சீனாவுடன் மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என நினைப்பதாகவும் தெரிவித்தார்.

 

Exit mobile version