ஆம்பூர்-குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள அதே வேளையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளில், வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்குப்பதிவை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

Exit mobile version