அகில இந்திய அளவிலான கார் தயாரிக்கும் போட்டி

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கார் தயாரிக்கும் போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னையில் தனியார் நிறுவனம் சார்பில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட பேட்டரி கார் தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 60 அணிகள் கலந்துகொண்டன. மாணவர்கள் உருவாக்கிய கார்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில், வேகம், மேடு பள்ளங்களை தாண்டுதல், அதிக தூரம் ஓடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய கார் முதல் பரிசை வென்றது. தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், பேட்டரியில் இயங்கும் இந்த காரினை உருவாக்க மூன்று மாதம் காலம் ஆனதாகவும், இதற்காக 12 லட்ச ரூபாயை செலவழிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version